×

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம் கண்துடைப்பா?.. எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இன்று முதல் தொடங்குவதாக வைக்கப்பட்ட பதாகை 2 மணி நேரத்திலேயே அகற்றப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இன்று முதல் தொடங்குவதாக வைக்கப்பட்ட பதாகை 2 மணி நேரத்திலேயே அகற்றப்பட்டுள்ளது.

கட்டுமான பணி தொடங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணியும் சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டது. தொடங்கிய வேகத்திலேயே பணிகள் நிறுத்தப்பட்டதால் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான வாஸ்து பூஜை மட்டுமே இன்று காலை மதுரை தோப்பூரில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தை சமன்படுத்த துணை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் வாஸ்து பூஜை நடத்தியதுடன் சிறிது நேரம் பணிகளை செய்துள்ளது.

கட்டுமான பணிகளை தொடங்கியதாக பெயருக்கு கணக்கு காட்டாமல் முழுவீச்சில் கட்டுமான பணிகளை தொடங்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாரையுமே அழைக்காமல் வாஸ்து பூஜை நடந்துள்ளதால் இது கண்துடைப்பாக மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்ட் டி நிறுவனம் நிலத்தை சமன்படுத்தும் பணிகளை இன்று தொடங்கியதாக எய்ம்ஸ் இயக்குனர் அனுமந்தராவ் விளக்கம் அளித்துள்ளார்.

கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஒப்பந்த நிறுவனமே முடிவுசெய்யும். பணி தொடங்கிய இன்றில் இருந்து 33 மாதங்களில் கட்டுமானத்தை முடித்து தர வேண்டும் என்றே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறினார்.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம் கண்துடைப்பா?.. எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,AIIMS ,Madurai ,Madurai AIIMS Hospital ,Modi ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...