×

தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தெலுங்கானாவில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காசிபேட் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தி வைக்க கூடிய இடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்திருந்த சரக்கு ரயிலில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நிலக்கரியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியின் மீது பரவி இதிலிருந்து சுமார் 4க்கும் மேற்பட்ட பெட்டிகள் தீயில் எரிந்தது.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்த பயணிக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kasipet railway station ,Telangana ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...