×

திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 

சென்னை:: திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று பல்முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், வி.சி.க., மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதியாகவுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Dimuka Alliance ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Congress ,Baja ,Dimuka ,Adimuga ,Dinakaran ,
× RELATED திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி...