×

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கும்: திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

மதுரை: தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கும் என முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்; கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் பெருமுதலாளிகள், அவர்களின் காவலராக மோடி இருக்கிறார்.

10 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் ஓடிப்போன 28 பேரில் 27 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஓடிப்போன மற்றொருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர், ஒருவர் கூட தமிழர் கிடையாது. பிரதமர் மோடி வெறும் வாய்சொல் வீரர்தான் என்று ரிஷிவந்தியம். கருப்புப் பணத்தை ஒழிப்பேன், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று கூறி நிறைவேற்றாதவர். வரும் தேர்தல், தமிழன் யார் என்பதை உணர்த்த வேண்டிய தேர்தல், நமக்கு வேண்டிய உரிமைகளை தர மறுக்கும் பாஜக-வை வீழ்த்த வேண்டிய தேர்தல், தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும், அத்துனை தொகுதிகளிலும் டெப்பாசிட் இழக்கும் இவ்வாறு கூறினார்.

 

 

The post தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கும்: திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,J. K. ,Dimuka M. L. A. Spring Karthikeyan ,Madurai ,B. GAMPAM SELVENDRAN SAID ,Madurai District ,Usilampatty ,Chief K. General Assembly ,Stalin ,Madurai Southern District ,Dimuka M. L. A. Vasanam Karthikeyan ,
× RELATED திருப்பூர் பெண் மீது தாக்குதல் – பாஜக பிரமுகர் மீது வழக்கு