×

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

 

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்தது. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

பெங்களூரு, தார்வாட், ஹுப்ளி ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் சிசிடிவியில் காணப்படும் நபரை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை, ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்த வந்த 10க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் பல இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை முத்தையால்பேட்டை, பிடாரியார் கோயில் தெருவில் சோதனை நடைபெற்று வருகிறது. பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

The post பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : NIA ,Ramanathapuram, Chennai ,Chennai ,Rameshwaram Cafe ,Whitfield, East Bengaluru, Karnataka ,Bangalore ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை