×

மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவுரை கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர், மார்ச் 5: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் 29 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.7,99,511 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

கரூர் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில்நேற்று நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 65 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு அலுவலர்கள் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ. 96011 மதிப்பிலான ரூ.57,6066 மதிப்பீட்டில் இணைப்புச்சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2780 விதம் ரூ.19,460 மதிப்பீட்டில் காதொலி கருவியும், 15 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 மதிப்பிலான ரூ.2,03,235 மதிப்பீட்டிலும் திறன்பேசிகளையும், ஒரு பயனாளிகளுக்கு ரூ.750 மதிப்பிலான ஊன்றுகோலும் என 29 பயனாளிகளுக்கு ரூ.7,99,511 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லேகா தமிழ்செல்வன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) தசைபுதீன், கருணாநிதி(நிலம்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், உதவி இயக்குநர் (கலால்) கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவுரை கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,DISTRICT COLLECTOR ,TANGAVEL ,KARUR DISTRICT COLLECTOR ,Karur District Collector's Office ,Advice ,Students Peoples' Day ,Dinakaran ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்