×

பிரதான குழாய் இணைப்பு பணி காரணமாக எல்பி ரோடு கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பிரதான உந்து குழாய்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால் எல்.பி.ரோடு கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது, என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் பெருங்குடி மண்டலம், பழைய மாமல்லபுரம் சாலையில் நேரு நகர் மற்றும் கந்தன்சாவடி பகுதிகளில் கழிவுநீர் பிரதான உந்து குழாய்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை எல்.பி.ரோடு (டாக்டர் முத்துலட்சுமி சாலை) கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது.

எனவே, அடையாறு மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதிப் பொறியாளர் – 9 (தேனாம்பேட்டை) 81449 30909, துணை பகுதி பொறியாளர் – 81449 30224, 8144930225, 81449 30226, பகுதி பொறியாளர் – 13 (அடையாறு) 81449 30913, துணை பகுதி பொறியாளர் – 81449 30238, 8144930239, 81449 30240, 81449 30247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

The post பிரதான குழாய் இணைப்பு பணி காரணமாக எல்பி ரோடு கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : LB Road Sewage ,Station ,CHENNAI ,LP Road Sewage Pumping Station ,Chennai Drinking Water Board ,Chennai Water Supply Board ,Perungudi ,LP Road ,Chennai Metro Rail Company ,Water Supply Board ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து