×

முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு: எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் வழங்கினர்

தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோ.ஜானகிராமன் ஏற்பாட்டில், மாபெரும் கால்பந்தாட்ட போட்டி பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு, போட்டியை தொடங்கி வைத்தனர்.

பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த அணியினருக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு: எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Minister's ,Birthday Celebration Football Tournament ,MLA ,Zonal Committee ,Tambaram ,Chief Minister ,M.K.Stal ,Kanchipuram North District DMK Youth ,Ko.Janakiraman ,Pallavaram ,Minister ,Thamo.Anparasan ,Sriperumbudur ,DR.Pallu ,Birthday Celebration ,Dinakaran ,
× RELATED சென்னை தி.நகரில் நடந்த பிரதமரின் ரோடு...