×

புத்தக திருவிழாவில் கருத்துரை நிகழ்ச்சி: இறையன்பு பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் நடந்த கருத்துரை நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 3வது புத்தகத் திருவிழாவின் 9ம் நாள் நிகழ்ச்சி கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற சிந்தனை அரங்கத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு \”திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும், என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இதேபோல் சுந்தரஆவுடையப்பனின் \”திருவள்ளுவரும் இளங்கோவடிகளும்\” என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியும், செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி குழுவினரின் மண்மணம் – மக்களிசையும் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வெ.இறையன்பு, சுந்தர ஆவுடையப்பன், செந்தில்கணேஷ் – ராஜலட்சுமி ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் த.பிரபுசங்கர் சிறப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி கலெக்டர் த.பிரபுசங்கர் பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.

The post புத்தக திருவிழாவில் கருத்துரை நிகழ்ச்சி: இறையன்பு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Book Festival: Divine Participation ,Tiruvallur ,Former ,Chief Secretary ,V. Irayanbu ,Tiruvallur Book Festival ,3rd book festival ,Collector ,T. Prabhushankar ,Thiruvallur ,District Collector Office ,Perunditta Complex ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு