×

பூந்தமல்லி 18வது வார்டில் திமுக திண்ணை பிரசாரம்

பூந்தமல்லி: பூந்தமல்லி 18வது வார்டில், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் `இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பு அம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் அநீதிகளை எடுத்துரைக்கும் வகையில், `இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு பகுதியில் மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் தலைமையில், வீடு வீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அப்போது, ஒவ்வொரு வீட்டிலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கிடைக்கப்பெற்ற திட்டங்கள், பலன்கள் குறித்து கேட்டறிந்தனர். மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து, வசதி, பெண் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் பயனடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பூந்தமல்லி 18வது வார்டில் திமுக திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Poontamalli ,Lion Sudhakar ,Dravida model government ,Tamil Nadu government ,Union ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில்...