×

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பொதட்டூர்பேட்டை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வு

பள்ளிப்பட்டு:பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்க தமிழ்நாடு முழுவதும் 100 தலைமையாசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாளை திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் விருது மற்றும் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் இந்த அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பொதட்டூர்பேட்டை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Pothatturpet Primary School ,Pallipattu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு