×

குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ஆவடி: ஆவடி, கோவில்பதாகை, மசூதி தெருவில் உள்ள பொது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கிணற்றில் இறங்கிப் பார்த்தனர். அப்போது அங்கு ஒரு ஆண் சடலம் மிதப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆவடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (35) என்பது தெரிய வந்தது. திருமணமாகாத இவர், சிமென்ட் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2ம் தேதி இரவு குடிபோதையில் கிணற்றின் அருகில் அர்ந்து இருந்த போது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Kovilpathagai ,Masjid Street ,
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...