×

ஆவடி அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம்

ஆவடி: முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் தலைமையில் திருநின்றவூர் நகர திமுக செயலாளர் ரவி ஏற்பாட்டில் காந்தி சிலை அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொண்டு பேசுகையில், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையை குறைப்பதாகக் கூறி வாயிலேயே வடை சுட்டு வரும் பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார். அவர் பத்து வருடம் ஆட்சி செய்துள்ளார். 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.

தமிழர்களை இந்தி கற்றால்தான் வேலை கிடைக்கும் என கூறினார். ஆனால், இன்று அனைத்து வடநாட்டவர்களும் நாள் ஒன்றுக்கு 30,000 பேர் என சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வருகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வேலை செய்து வருகின்றனர். மொழியால் புறப்பணிக்கப்பட்டு நாம் வஞ்சிக்கப்பட்ட இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்றைய தினம் (நேற்று) மீண்டும் வந்து திமுக அழிந்து விடும், எனக்கு வாக்களியுங்கள் என கூறுகிறார். திமுகவை அழிக்க முடியாது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், நகரச் செயலாளர் தி.வை.ரவி, நகர மன்ற தலைவர் உஷாராணி உட்பட பலர் உள்ளனர்.

The post ஆவடி அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Avadi ,Aavadi ,Chief Minister ,M.K.Stal ,Gandhi ,Thiruvallur Central District ,Aavadi Assembly ,S.M. Nassar ,Thiruninnavur ,Ravi ,Egmore ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...