×

அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

புழல்: சென்னை புழல் அடுத்த கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் கதிர்வேடு பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சிக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து மகேஸ்வரி தலைமை தாங்கினார். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி, தனியார் தொண்டு நிறுவன மேலாளர் சுந்தரபாண்டியன், செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் முன்னேற்றங்கள் குறித்து சிறப்பாக காட்சிகளை வைத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

The post அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair in Government ,Puzhal ,Kathirvedu Government High School ,Corporation Primary School ,Kathirvedu ,Chennai Puzhal ,Muthu ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்