×

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி!

சென்னை: பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இன்று மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார்.

பின்னர், கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். மாலை 5 மணிக்கு கல்பாக்கத்தில் இருந்து மீண்டும் விமான நிலையம் வந்து சாலை மார்க்கமாக நந்தனம் செல்கிறார். நந்தனம் கூட்டத்தில் பங்கேற்று சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து தெலங்கானா செல்கிறார். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் இன்று வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . காவல் ஆணையர் உத்தரவுப்படி பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் வரவேற்றனர்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

 

The post பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Modi ,BJP General Meeting ,Nandana, Chennai ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!