×

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

 

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் 3,89,736 பேர் மாணவர்கள். 4,30,471 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 5000 பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 154 கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க 46,700 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் யாரும் தேர்வுப் பணியில் ஈடுபடக்கூடாது என்று அடிப்படையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து தனியார் பள்ளி தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : general election ,Puducherry, Tamil Nadu ,Chennai ,Class ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு