×

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இன்று பிற்பகல் 1.15க்கு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார். பின்னர் மாலை 3.30க்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். மாலை 5மணிக்கு கல்பாக்கத்தில் இருந்து மீண்டும் விமான நிலையம் வந்து சாலை மார்க்கமாக நந்தனம் செல்கிறார். நந்தனம் கூட்டத்தில் பங்கேற்று சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து தெலங்கானா செல்கிறார்

போக்குவரத்து மாற்றம்:
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் இன்று வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை உள்ளிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு, அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் உத்தரவுப்படி பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

ஏப்.29 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை
பிரதமர் வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்.29 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,BJP General Assembly ,Modi ,Nandana, Chennai ,Maharashtra ,BJP ,general meeting ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!