×

தடையின்றி நேரடி நெல் கொள்முதல் 31 ரவுடிகள் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் திடீர் சோதனை

திருவாரூர், மார்ச் 3: திருவாரூர் மாவட்டத்தில் 31 ரவுடிகள் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். திருவாரூர் எஸ்பியாக ஜெயக்குமார், பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தில் ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, சட்ட விரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரே நேரடியாக சென்று ரவுடிகளையும், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்து வருகிறார். இந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து ரவுடிசத்தில் ஈடுபட்ட திருவாரூர் தாலுகா காவல் சரகத்தை சேர்ந்த சிவராஜன் என்பவரும், முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட பரத்குமார் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் தொடர் நடவடிக்கையாக திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்டங்களிலும், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் 31 ரவுடிகளின் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் தணிக்கை செய்யப்பட்டது. குறிப்பாக திருவாரூர் நகரம், திருவாரூர் தாலுகா, கூத்தாநல்லூர், குடவாசல், வலங்கைமான், எரவாஞ்சேரி, நீடாமங்கலம், எடையூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த தணிக்கை நடைபெற்றது.

இதில் எடையூர் மற்றும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 தொடர்பாக ரவுடிகள் தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனை நடத்தப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post தடையின்றி நேரடி நெல் கொள்முதல் 31 ரவுடிகள் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Jayakumar ,SP ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி