×

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

 

பெரம்பூர், மார்ச் 4: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில், கொளத்தூர் அகரம் பகுதியில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடத்தப்பட்டது. மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் திலீப் குமார் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஊக்கப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் கலாநிதி விராசாமி எம்பி, மேயர் பிரியா, தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், திரு.வி.க.நகர் மண்டல குழு தலைவர் சரிதா மற்றும் மகேஷ்குமார், தனசேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Perambur ,M.K.Stal ,Kolathur Akaram ,DMK ,Chennai East District ,Kolathur West ,blood donation camp ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...