×

மதுராந்தகத்தில் கட்டுமான சங்க மகளிர் ஆலோசனை கூட்டம்

 

மதுராந்தகம், மார்ச் 4: தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் மகளிர் சுய முன்னேற்றத்திற்கான ஆலோசனை மற்றும் சட்ட விழிப்புணர்வு கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜான்விஜயகுமார் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநில பொதுச் செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

மகளிர் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், அவர்களை சிறு தொழில் முனைவோராக மாற்றவும், அவர்கள் சிறு தொழில்கள் துவங்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டம் சார்ந்த அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்தவும் நடைபெற்ற இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அவரவருக்கு தெரிந்த பல்வேறு தொழில்களை மேற்கொள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உதவியோடு, இந்த கட்டுமான சங்கமும் இணைந்து கடன் உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யும் என சங்கத்தின் நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இந்த கூட்டத்தில், சங்கத்தின் பெண் நிர்வாகிகள் ஆரோக்கிய மேரி, சுதா, கனிமொழி, நிர்மலா, நாகம்மாள், லட்சுமி, மல்லிகா, ஜெகதா, அல்லி, வெண்மதி, வித்யாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகத்தில் கட்டுமான சங்க மகளிர் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Association ,Madhuranthak ,Madhurandakam ,Tamil ,Nadu ,Construction Manual Workers Welfare Central United Union Association for Women's Self-Advancement Counseling ,Legal ,Awareness ,Maduraandakam ,Meeting ,Madurantha ,
× RELATED அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம்...