×

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தவறாமல் வழங்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் நடைபெறும்.

இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தவறாமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள் போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள். நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தவறாமல் வழங்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,Mu. K. Stalin ,Tamil Nadu ,MLA K. Stalin ,
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...