×

நாளை மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர்: சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்.

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டை குறி வைத்து பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. கடந்த 27ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் 6 நாட்களுக்குள் தமிழகம் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிறைவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவர் தமிழகம் வந்து விட்டு திரும்பிய 6 நாட்களுக்குள் மீண்டும் தமிழகம் நோக்கி வருவது பாஜக எந்த அளவிற்கு தமிழகத்தை குறி வைத்து இயங்குகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

நாளை பிற்பகல் சென்னை வரும் பிரதமர் நரேந்திரமோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உள்ள நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். இதற்காக சென்னை நந்தனத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான பணிகள் பெரிய அளவில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post நாளை மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர்: சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம். appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,BJP ,Narendra Modi ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...