×

தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 57.84இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் வகையில் போலியோ சொட்டு மருத்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் முகாமானது மாலை 5 மணி நடைபெறும். அதன் படி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள். இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Government Primary Health Centres ,Anganwadi Centres ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...