×

கரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் புள்ளி மான் பலி

தோகைமலை, மார்ச் 3: கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இருந்து துள்ளி குதித்து சென்ற பெண் புள்ளி மான் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள வடசேரி பெரிய ஏரியில் 50 க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளது. இந்த புள்ளி மான்கள் மேய்ச்சலுக்காக இரவு நேரங்களில் வடசேரி பெரிய ஏரியில் இருந்து வெளியில் வருவதும், பின்னர் பெரிய ஏரிக்குள் செல்லுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வடசேரி பெரிய ஏரியில் இருந்து சுமார் 5 வயது உடைய பெண் புள்ளிமான் ஒன்று மேய்ச்சலுக்காக வெளியில் வந்து உள்ளது. அப்போது வடசேரியை சேர்ந்த தனுஷ் (14) என்பவரது இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதில் தனுஷ் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பலியானது.

இதுகுறித்து தகவலறிந்த வடசேரி விஏஓ கணேசன், உதவியாளர் அம்பிகாபதி, வடசேரி பகத்சிங் இளைஞர் மன்ற நிர்வாகி சக்திவேல் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து புள்ளிமானை உடல் கூறு ஆய்வுக்காக எடுத்து சென்று உள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறை மற்றும் வடசேரி விஏஓ விசாரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் புள்ளி மான் பலி appeared first on Dinakaran.

Tags : Karur ,DOKAIMALI ,WADASHERI ,Vadaseri Great Lake ,Dhokaimalai, Karur district ,Dinakaran ,
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்