×

அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தெருக்கூத்து, நாடகம் வாயிலாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர், மார்ச் 3: மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறையும், தொண்டு நிறுவனமும் இணைந்து கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகங்கள் 6 இடங்களில் நடத்தினர். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மற்றும் அன்றாட செயல்பாடுகள், அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழல் பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை, புதுப்பிக்க தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துதல், திட கழிவு மேலாண்மையை பின்பற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீர் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, ஒருமுறை மற்றும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்த்தல், காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது, பல்லுயிர் பாதுகாப்பு செயல்கள், வீட்டு பொருட்கள் உபயோகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின் சாதனங்கள் மற்றும் கணினி, மொபைல் ஆகிய எலக்ட்ரானிக் கழிவுகளை முறையாகத் தவிர்த்து கையாளுதல், மண் வளம் மற்றும் இயற்கை வளம் காத்தல் போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

அதிக அளவில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப், கிரேவி கப், தண்ணீர் கப் என அன்றாட வாழ்க்கையில் டீ கடை, ஹோட்டல் விசேஷ வீடுகள் மற்றும் கல்யாண மஹால்கள் என அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் குப்பை கழிவுகள் இவற்றை பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் உணர்ந்து அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

பாரம்பரிய முறையில் சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், தட்டு, வாழை இலை இவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் பிளாஷ்டிக் பைகளை பயன்படுத்தாது, துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு பணிகளை தெரு நாடகங்கள் வாயிலாக மேற்கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரச்சுரம் மற்றும் துணி பை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

The post அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தெருக்கூத்து, நாடகம் வாயிலாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Amaravati river ,Karur ,Central Government Department of Environment, Forest and Climate Change ,Tamil Nadu Government Department of Environment and Climate Change ,Dinakaran ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...