×

பெரும்புதூர் பேரூர் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா

பெரும்புதூர், மார்ச் 3: பெரும்புதூர் பேரூர் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பெரும்புதூர் பேரூர் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாள் விழா பெரும்புதூர் காந்தி சாலையில் நேற்று கொண்டாடபட்டது. விழாவிற்கு பெரும்புதூர் பேரூர் செயலாளர் சதிஷ்குமார் தலைமை வகித்தார். பேரூர் துணை செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், அவைத் தலைவர் வேணு, பேரூராட்சி துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக கட்சிக் கொடியேற்றி, அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. மேலும் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில், பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் கார்த்திகேயன், சீனிவாசன், மாணவரணி லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரும்புதூர் பேரூர் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Perumbudur Berur ,Chief Minister ,DMK ,Perumbudur ,Perur ,M.K.Stal ,Perumbudur Perur DMK ,Perumbudur Gandhi Road ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...