×

கிராவல் மண் அள்ளிய 3 டிப்பர் லாரி பறிமுதல்

ஆத்தூர், மார்ச் 3: தலைவாசல் அடுத்த புத்தூர் ஏரியில், நேற்று முன்தினம் இரவு, தலைவாசல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணிவிழுந்தான் பகுதியில் கிராவல் மண் ஏற்றிய நிலையில் 3 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, கோவிந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர், கிராவல் மண் எடுப்பதற்காக வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்ததாகவும், புத்தூர் ஏரியில் கிராவல் மண் ஏற்றி விற்பனைக்காக கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், தலைவாசல் காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்தது ராமசேஷாபுரம் கிராமத்தை சேர்ந்த நரேஷ்(26), வேப்பம்பூண்டி மணிகண்டன்(35), பட்டுதுரை பெரியசாமி(35) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சதாசிவம் மற்றும் செல்வராஜை தேடி வருகின்றனர்.

The post கிராவல் மண் அள்ளிய 3 டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Aathur ,Thalivasal ,Puttur lake ,Manivilundhan ,Dinakaran ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது