×

பெண்ணிடம் ₹14 லட்சம் நூதன மோசடி

கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரி அடுத்த பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நாகராணி(45). இவரது வாட்ஸ் அப்பிற்கு, கடந்த 23ம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதற்கு பணம் செலுத்தினால் அதிகளவில் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் கொடுத்திருந்த நம்பரை தொடர்பு கொண்டு நாகராணி பேசினார். பின்னர், அவர்கள் கூறியபடி, பல்வேறு வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹14 லட்சத்து 3,700 அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை. பின்னர், அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் ₹14 லட்சம் நூதன மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kumar ,Old Pettah ,Nagarani ,
× RELATED அணையில் மூழ்கி கட்டிட மேஸ்திரி பலி