×

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

கிருஷ்ணகிரி, மார்ச் 3: சூளகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜான்லூர்து சேவியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சூளகிரி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் பண்ணைக்கருவிகள், ஜிப்சம், ஜிங்க் சல்பேட், ஸ்பிரேயர், திரவ உயிர் உரம், நுண்ணூட்ட உரம் ஆகியவை, மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (ராகி) திட்டத்தில், கரிம உரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், பாலசுப்பிரமணியம், தமிழ்வேந்தன், முருகேசன், தமிழ்செல்வி ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Assistant Director of Agriculture ,Choolagiri ,Janlurdu Xavier ,Choolagiri district ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்