×

அரசு பள்ளி ஆண்டு விழா

தேன்கனிக்கோட்டை, மார்ச் 3: கெலமங்கலம் அருகேயுள்ள நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனிராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன்தேஜஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்வாதம் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Nagamangalam Panchayat Union ,Primary ,School ,Kelamangalam ,District ,Elementary ,Education Officer ,Muniraj ,District Education Officer ,Krishnanthejas ,Dinakaran ,
× RELATED யானை தாக்கி விவசாயி பலி