×

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி வேண்டும் என கேட்டிருக்கிறோம்: ஜவாஹிருல்லா

சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க.வுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – விசிக இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

*மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி வேண்டும் என கேட்டிருக்கிறோம்.

*மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது

*இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மமக செயல்படும் எனவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

*40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்.

*2021 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகள் அளிக்கப்பட்டு இரண்டிலும் வெற்றி பெற்றோம் இவ்வாறு கூறினார்.

 

The post மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி வேண்டும் என கேட்டிருக்கிறோம்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Tags : Humanist People's Party ,demuga ,Lok Sabha ,Jawahirulla ,Chennai ,Dimuka ,Humanitanaya People's Party ,Anna Vidyalayat D. R. Akkad ,Balu ,Dimuga Alliance ,Union of India ,Dimuka Alliance ,Lok ,Dinakaran ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...