×

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து!..

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டது. மார்ச் 3-ல் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணிக்கும், காஞ்சிபுரம்-தாம்பரம் இடையே காலை 9.30, திருமால்பூர்-தாம்பரம் இடையே நண்பகல் 12 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4-வது வாரமாக தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து!.. appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram ,Chennai beach ,Kodambakam- ,Dinakaran ,
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்