×

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 81 மையங்களில் 14,650 பேர் எழுதினர்: 203 பேர் ஆப்சென்ட்

 

சிவகங்கை, மார்ச் 2: சிவகங்கை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்களில் 14,650 பேர் பிளஸ்2 தேர்வினை எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ்2 தேர்வை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்களில், 163 பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 669 மாணவர்கள், 8 ஆயிரத்து 184 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 854 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6 ஆயிரத்து 555 மாணவர்கள், 8 ஆயிரத்து 95 மாணவிகள் உள்பட 14,650 மாணவ, மாணவிகள் நேற்று நடைபெற்ற தேர்வை எழுதினர்.

114 மாணவர்கள், 89 மாணவிகள் என மொத்தம் 203 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வு கண்காணிப்பில் இணை இயக்குநர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள், 1260 அறைக்கண்காணிப்பாளர்கள், 112 நிலையான படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் எவ்வித குளறுபடியும் இல்லாமல் நேற்றைய தேர்வு நடந்து முடிந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அலுவலர்கள் இருந்தனர். நேற்றைய தமிழ் முதல்தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 81 மையங்களில் 14,650 பேர் எழுதினர்: 203 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Sivaganga district ,Sivagangai ,Sivagangai district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு