×

அரசு பள்ளி கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

 

வலங்கைமான், மார்ச் 2: வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் கலைத் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் ஜலஜா தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழு தலைவி சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரம்ஜான் பீவி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

The post அரசு பள்ளி கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Govt School Art Festival ,Walangaiman ,Panchayat Union Primary School ,Valangaiman Municipality ,Valangaiman ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...