×

பிளஸ் 2 தேர்வு மையங்களில் கலெக்டர்கள் ஆய்வு

செங்கல்பட்டு, மார்ச் 2: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் மணவர்கள் தேர்வு எழுதுவதை கலெக்டர்கள் அருண்ராஜ், கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று முதல் 22ம் தேதி வரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வினை மாணவ, மாணவிகள் எழுதி வருவதை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 79, அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 21, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 215 என மொத்தம் 315 பள்ளிகள். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை 85.

இதில், 13,853 மாணவிகளும், 11,632 மாணவர்களும் மொத்தம் 25,485 பேர் தேர்வெழுதினர்.இதில், நேற்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்ட புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் விடுப்பு ஏதும் இல்லாமல் அனைத்து 504 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர். ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதும் மையத்தினை காஞ்சிபுரம மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பிளஸ் 2 தேர்வு மையங்களில் கலெக்டர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Plus 2 ,Chengalpattu ,Arunraj ,Kalachelvi Mohan ,Kanchipuram ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்