×

பார்வதி பரமேஸ்வர திருக்கல்யாணம்

போச்சம்பள்ளி, மார்ச் 2: மத்தூர் அரசமரத்து அங்காளம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி பெருவிழா, பார்வதி பரமேஸ்வர திருக்கல்யாண வைபவம் மற்றும் நூதன தெய்வ திருமேனிகள் மாசி மாத மகா சிவராத்திரி பெருவிழா நடந்தது. காலை சுப முகூர்த்தக்கால் நடுதல், கொடியேற்றுதல், கங்கனம் கட்டுதல், மாலை போடுதல், தொடர்ந்து பார்வதி பரமேஸ்வர திருக்கல்யாண மஹோத்ஸவ வைபவம், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று 2ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அரசமரத்தூர் அங்காளம்மன், சிவபெருமான், வல்லப கணபதி, முருகன், வராகி பெருமாள் மற்றும் கோஷ்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பூங்கரகம், பூவாடை பெட்டி, ஊர்வலம் மதியம் மீனவ தாய் வீட்டாரின் பூ கூடை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.

The post பார்வதி பரமேஸ்வர திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Parvati Parameswara Thirukalyanam ,Bochambally ,Mathur Arasamaratu Angalamman Temple Masi Maha Shivratri Festival ,Parvati Parameswara Thirukalyana Vaibhavam ,Nuthana Deiva Thirumenis Masi Matha Maha Shivratri Festival ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை