×

விபத்தில் சிக்கிய மின் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 2: ஊத்தங்கரை அருகேயுள்ள மேட்டுக்காலனி அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40). இவரும் கிருஷ்ணகிரி காந்தி நகரைச் சேர்ந்த அருள் முத்துராமன்(35) என்பவரும், ஓசூர் அரசனட்டியில் உள்ள மின்வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள மேம்பாலத்தில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், மேம்பால தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார். முத்துராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் சிக்கிய மின் ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tirunavukarasu ,Mettukalani Anna Nagar ,Uthangarai ,Arul Muthuraman ,Gandhi ,Nagar ,Hosur Aranatti ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்