×

இன்று ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரையில் ரூ.180 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை: இன்று ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரையில் ரூ.180 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். பொதிகை ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் காலையில் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற போது போதைப்பொருள் சிக்கின. பறிமுதல் செய்யப்பட்டவை ஐஸ் அல்லது கிரிஸ்டல் மெத் என அழைக்கப்படும் போதைப்பொருள் ஆகும். போதை பொருள் கடத்திய நபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொண்டங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் ரூ. 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பறிமுதல் செய்யப்பட்டது.

29.02.2024 அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு பொதிகை விரைவு ரயில் சென்றது. இதில் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் 01.03.2024 அன்று காலை ரயில் மதுரையை அடைந்ததும் சோதனை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட பயணி அடையாளம் காணப்பட்டு அவரது உடமைகளை பரிசோதித்ததில், மொத்தம் 30 கிலோ எடையுள்ள 15 பாக்கெட்டுகளில் வெள்ளை நிற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மெத்தாம்ஃபேட்டமைன் என்று கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேலும் சில மெத்தாம்ஃபேட்டமைன் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் சோதனையிட்டபோது, மொத்தம் 6 கிலோ எடையுள்ள 3 பாக்கெட்டுகளில் இருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.180 கோடியாகும். இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post இன்று ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரையில் ரூ.180 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madura ,Tamil Nadu ,Sri Lanka ,
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...