×

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

திருவள்ளூர்: கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று திருவள்ளூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் R.காந்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் S.சுதர்சனம், ச.மு.நாசர், V.G.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.T.பிரபுசங்கர், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் J.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,THIRUVALLUR ,YOUTH WELFARE AND SPORT DEVELOPMENT DEPARTMENT ,Minister of Youth Welfare and Sport Development ,Assistant Minister for Youth Welfare and Sport Development ,Adyanidhi ,Stalin District ,Minister Assistant ,Dinakaran ,
× RELATED மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில்...