×

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாலை முதல் பிரபு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ பிரபு மட்டுமின்றி அவரது தந்தை அய்யப்பா வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக எம்எல்ஏ பிரபு, தந்தை அய்யப்பா ஆகியோரது வீடு, பண்ணை வீடு, பால்பண்ணை உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனைக்கு பின்னரே, அவரது வீட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் எம்எல்ஏ பிரபு மீது ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. பிரபு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ தந்தை அய்யப்பா தியாதுருகம் ஒன்றிய செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவரது கணவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

The post சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Ah Prabhu ,Kallakurichi ,Kallakurichi Adimuka ,M. L. Bribery Department ,Lord ,MLA ,L. Anti-Bribery Department ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...