×

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்.. தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை; பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் முதலமைச்சர்.

இதனிடையே தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதே போல், வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.அப்போது, பெரியார் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டி தி.க. தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோரும் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்.. தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை; பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mudhalwar Mu. K. ,Stalin ,PM ,Modi ,Chennai ,Chief Mu. K. ,Tamil ,Nadu Mudhalwar Mu. K. Stalin ,Gopalpuram House ,
× RELATED தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட...