×

பெருங்களூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி: எம்எல்ஏ முத்துராஜா திறந்து வைத்தார்

 

கந்தர்வகோட்டை, மார்ச் 1: பெருங்களூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை எம்எல்ஏ முத்து ராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் முதல் நிலை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் அங்கன்வாடி மையமும், மேலும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி சாமிய்யா,

துணை தலைவர் சித்ரா சவுந்தர்ராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமளா, மேற்பர்வையாளர் ராணிபாரதி, ரக்மானியா, ராஜ லட்சுமி, ஒன்றிய செயலாளர் சாமிநாதன், இலக்கிய அணி அமைப்பாளர் பாலு, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், அவை தலைவர் ரவிசந்திரன் மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

The post பெருங்களூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி: எம்எல்ஏ முத்துராஜா திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anganwadi building ,Perungalur panchayat ,MLA ,Muthuraja ,Gandharvakot ,Muthu Raja ,Anganwadi Center ,Anna Revival Project ,Pudukottai District ,Perungalur ,Level Panchayat ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...