×

சின்னியம்பாளையம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

 

கோவை, மார்ச் 1: கோவை கொடிசியாவில் நடந்த நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், நிகழ்ச்சி முடித்து கொண்டு விமான நிலையம் செல்லும் வழியில் திடீரென அருகே உள்ள பள்ளிக்கு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்தார். அதன்படி, சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையத்தை பார்வையிட்டார்.

தேர்வு பணிகள் ஏற்பாடு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டறிந்தார். மேலும், பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக்கு சென்ற அமைச்சர், அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடினார். மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் பொதுத்தேர்வுக்கு நன்றாக படிக்க வேண்டும். தேர்வை நன்றாக எழுத வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களை அழைத்து அவர்களை புத்தகத்தை படிக்க கூறி மாணவர்களின் வாசிப்பு திறனை அமைச்சர் பரிசோதித்தார்.

The post சின்னியம்பாளையம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chinniampalayam Government School ,Coimbatore ,School Education Minister ,Kodisia, Coimbatore ,Chinniyampalayam Government School ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...