×

பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

பவானி, மார்ச் 1: பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் அறிவானந்தம், முன்னாள் எம்பி கோவிந்தராஜர், பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்றார்.

பவானி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில திட்டக்குழு துணைத் தலைவருமான பார் இளங்கோவன், அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விவசாய அணி துணை தலைவருமான தமிழ்மணி, எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணி குறித்தும் பேசினர். இதனை தொடர்ந்து தொகுதி பார்வையாளர்களிடம் ஓஎம்ஆர் படிவங்களை திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் பேரூராட்சி தலைவர் பாரதி (எ) வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் மோகனசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீரங்கன், கண்ணுசாமி, ஒன்றிய பொருளாளர் அக்ரி நடேசன், மாவட்ட பிரதிநிதிகள் ஸ்ரீதர், சந்திரன், சண்முகசுந்தரம், செர்புதீன், மாவட்ட விவசாய அணித் தலைவர் முருகேசன், மகளிரணி துணை அமைப்பாளர் சம்பூரணவள்ளி, கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், அம்மாபேட்டை பேரூர் செயலாளர் பெரியநாயகம், முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Polling ,Agents ,Bhavani ,Anthiur Assembly ,Andhiur ,Ammapet ,Union President ,Subramaniam ,Northern Union DMK. ,Station ,Anthiur Assembly Constituency ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா