×

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை, மார்ச் 1: ஊத்தங்கரையில், திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமை வகித்து பேசினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் அமானுல்லா, முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மத்தூர் ஒன்றிய செயலாளர் வசந்தராசு, நகர அவைத்தலைவர் தணிகை குமரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் சீனிவாசன் பங்கேற்று, எதிர்வ ரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். ஊத்தங்கரை பேரூராட்சி துணைத்தலைவர் கலைமகள் தீபக், மாவட்ட மருத்துவரணி தலைவர் மருத்துவர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK Executives ,Uthangarai ,DMK ,Northern Union ,Moonambatti Kumaresan ,Southern union ,Rajini Selvam ,Oodhangarai ,president ,Amanullah ,MLA ,Narasimhan ,Dinakaran ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது