×

இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

செங்கல்பட்டு, மார்ச் 1:தமிழகத்தில், 2023-2024ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி, வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 ஆயிரத்து, 853 மாணவர்கள், 11 ஆயிரத்து, 632 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து, 485 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதோபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் 5,750 மாணவர்கள், 6,791 மாணவிகள் என மொத்தம் 12,541 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் எளிதில் தேர்வு மையங்களுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

The post இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tamil Nadu ,
× RELATED வாக்களித்த மை அடையாளத்தை காட்டினால்...