×

பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம் 28,510 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

திருவள்ளூர், மார்ச் 1: பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 25,822 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் 105 தேர்வு மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 13,506 மாணவர்களும், 15,004 மாணவிகளும் என மொத்தம் 28,510 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 25ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 13,506 மாணவர்களும், 15,404 மாணவிகளும் என மொத்தம் 29,510 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 16,858 மாணவர்களும், 16,572 மாணவிகளும் என மொத்தம் 33,430 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைத்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம் 28,510 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,District Primary Education Officer ,Ravichandran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...