×

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்து. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது; எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் 40 தொகுதிகளும் எங்களது தொகுதிகளாக கருதி வேலை செய்வோம். இதுவரை திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 இடங்கள் ஒதுக்கீடு.

ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை தொகுதி கேட்டு திமுகவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோவை, மதுரை தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மதுரை, கோவை ஆகிய இரு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் – திமுக கூட்டணியில் தற்போது வரை தொகுதிப்பங்கீடு நிலவரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, கொ.ம.தே.க – 1 (நாமக்கல், உதயசூரியன் சின்னத்தில் போட்டி), ஐ.யூ.எம்.எல் – 1 (ராமநாதபுரம்)

 

The post மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு! appeared first on Dinakaran.

Tags : MARXIST COMMUNIST PARTY ,DIMUKA ALLIANCE ,Chennai ,Lok Sabha ,Dimuka ,Anna Enlightenment ,Dima Alliance ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...