×

ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலு நடவடிக்கைக்கு ஆளாகமலேயே இன்று ஓய்வு?

சேலம்: ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலு நடவடிக்கைக்கு ஆளாகமலேயே இன்று ஓய்வு பெறவுள்ளார். பெரியார் பல்கலைகழகத்தில் கணினி மென்பொருள் வாங்கியதில் ஊழல், பல்வேறு பொருட்கள் வாங்கியதில் ஊழல், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்க சலுகைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு என பதிவாளர் தங்கவேலு ஊழல் செய்தது நிறுபனம் ஆகியுள்ளது.

ஊழல் செய்த பதிவாளர் தங்கவேலுவை சஸ்பென்ட் செய்யுமாறு உயர்கல்வித்துறை செயலாளர் துணை வேந்தர் ஜெகநாதனுக்கு 2 முறை கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் துணை வேந்தர் ஜெகநாதன் எந்த ஒரு நடவடிகையும் எடுக்கவில்லை. ஆசிரியர் சங்கமும், தொழிலாளர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நேற்று காலை, மாலை என இருவேலையும் பல்கலைகழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் செய்த பதிவாளருக்கு துணை வேந்தர் துணை போவதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நேற்று பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் துணை வேந்தருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அரசு பரிந்துரையின் படி அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மதிக்காமல் பதிவாளர் தங்கவேல் தொடர்ந்து பணியமர்த்தபட்டுள்ளார். ஊழல் புகார் நிறுபனம் ஆன நிலையிலும் நடவடிக்கைக்கு ஆளாகாமலேயே இன்று ஓய்வு பெறவுள்ளார். இறுதிநாளான இன்று பதிவாளர் தங்கவேலு சஸ்பென்ட் செய்யப்படுவார என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

The post ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலு நடவடிக்கைக்கு ஆளாகமலேயே இன்று ஓய்வு? appeared first on Dinakaran.

Tags : Salem University ,Registrar ,Denagavelu ,Salem ,Tangavelu ,University of Periyar ,Union Government ,SC ,SD ,Dinakaran ,
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு