×

வேதாளை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

மண்டபம், பிப். 29: வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சார்வலசை கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குஞ்சார்வலசை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு ராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைதூரத்திற்கு சென்ற இடையர்வலசை பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருள்களை வாங்கிய வரவேண்டும்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு இல்லாமலும், அதிக எடையளவு கொண்ட பொருள்களை வாங்கி வருவதற்கும் சிரமப்படுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் குஞ்சார் வலசை கிராமத்திலேயே ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் திறப்பதற்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியில் அந்த பகுதியிலே புதிய கட்டிடம் கட்டும்பணிகள் துவங்கி முடிவடைந்தது.

இந்த கட்டிடம் திறப்புவிழாவிற்கு எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் பொருட்களை வழங்கும் பணியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அல்லாபிச்சை, ஊராட்சி செயலர் ராஜேந்திரன், திமுக கிளை செயலர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வேதாளை ஊராட்சியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Vedalai panchayat ,MLA ,Kuncharvalasai ,Vedalai ,panchayat ,Ramanathapuram District Mandapam Union ,
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...